search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operation Kaveri"

    • நேற்று முன்தினம் தனி விமானத்தில் 231 இந்தியர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும், 328 பேர் டெல்லிக்கும் வந்து சேர்ந்தனர்.
    • இதுவரை 2 ஆயிரத்து 930 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

    ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

    இந்த சண்டையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஒவ்வொரு நாடும் சூடானில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்து வருகிறார்கள். அதுபோல், சூடானில் வசித்து வரும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக, 'ஆபரேஷன் காவேரி' என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    சூடானில் சண்டை நடந்து வரும் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள், பஸ்கள் மூலமாக போர்ட் சூடான் நகருக்கு வரவழைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து விமானம் அல்லது கப்பல்கள் மூலமாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.

    நேற்று முன்தினம் தனி விமானத்தில் 231 இந்தியர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும், 328 பேர் டெல்லிக்கும் வந்து சேர்ந்தனர்.

    இந்நிலையில், நேற்று மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். மும்பைக்கு வர்த்தக விமானத்தில் வந்து சேர்ந்தனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

    இதுவரை 2 ஆயிரத்து 930 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    • ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்த எட்டாவது விமானம் இது.
    • சூடானில் இருந்து இந்தியா வந்தடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

    இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ சி-130 ரக விமானத்தில் 40 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்தடைந்த எட்டாவது விமானம் இது ஆகும். இதன் மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    "இந்திய வான்படையை சேர்ந்த ஏ சி-130 ரக விமானம் 40 பயணிகளுடன் புது டெல்லியில் தரையிறங்கி இருக்கிறது. இந்த விமானத்தில் வந்தவர்களை சேர்த்தால், சூடானில் இருந்து இந்தியா வந்தடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது," என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார்.

     

    இதுதவிர 229, 228 மற்றும் 135 பயணிகளுடன் மேலும் மூன்று விமானங்கள் இந்தியா வரவுள்ளன. இவற்றை சேர்க்கும் பட்சத்தில் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ கடந்துவிடும்.

    முன்னதாக சனிக்கிழமை அன்று 365 இந்தியர்கள் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பினர். இவர்கள் வந்த விமானம் புது டெல்லியில் தரையிறங்கிது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் அந்நாட்டில் சிக்கித்தவிக்கும் தங்களது குடிமக்களை மீட்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றன.

    • உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்கள் ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
    • 7 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்கள் 'ஆபரேஷன் காவேரி' திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு இந்தியா வந்துள்ள நிலையில், அவர்களில் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மஞ்சள் காய்ச்சல் என்ற வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி போடாததுதான் காரணம்.

    தனிமைப்படுத்தலுக்காக, வருகை மையங்களில் விமான நிலைய சுகாதார அதிகாரிகளின் நிர்வாகத்திலும், மேலும் பல ஆஸ்பத்திரிகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் இலவசமாக தங்கவைப்படுவார்கள்.

    7 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
    • இந்தியர்கள் நாடு திரும்பிய தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    சூடானில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன. சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

    முதலில் சூடானில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் சூடான் துறைமுகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து அவர்கள் விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

    ஏற்கனவே 4 கட்டமாக 1,360 இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் பத்திரமாக டெல்லி வந்து சேர்ந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவு செய்து புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

    • ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • ஜெட்டா, சூடான் துறைமுகம் மற்றும் கார்தூமில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் தனித்தனி கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து மேலும் 754 பேர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். இதன் மூலம் சூடானில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக உயர்ந்துள்ளது.

    ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப்போர் வெடித்து உள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    உள்நாட்டுப்போர் உக்கிரம் அடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன.

    அதன்படி சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதற்காக விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.

    உள்நாட்டுப்போர் உக்கிரமாக நடந்து வரும் தலைநகர் கார்தூம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    அங்கிருந்து அவர்கள் விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

    சூடானில் இருந்து இவ்வாறு மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவினர் கடந்த 26-ந்தேதி டெல்லி வந்தடைந்தனர். அடுத்ததாக 246 இந்தியர்களை விமானப்படை விமானம் நேற்று முன்தினம் ஜெட்டாவில் இருந்து மும்பை கொண்டு வந்து சேர்த்தது.

    இதைத்தொடர்ந்து மற்றொரு விமானப்படையின் சி.17 குளோப்மாஸ்டர் விமானத்தில் 392 இந்தியர்கள் அடங்கிய 3-வது குழுவினர் நேற்று டெல்லியை அடைந்தனர்.

    இதைப்போல மேலும் 362 பேரை கொண்ட 4-வது குழுவுடன் மற்றொரு விமானம் நேற்று பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது.

    இதன் மூலம் சூடானில் சிக்கியிருந்த 1,360 இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் இந்த ஆபரேஷன் காவேரி நடவடிக்கைக்காக ஜெட்டா, சூடான் துறைமுகம் மற்றும் கார்தூமில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் தனித்தனி கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    இந்த மையங்களுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு இந்த பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதனால் இந்த மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது.
    • அங்கிருந்து மேலும் 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்.

    மும்பை:

    உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன.

    சூடானில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.

    இதற்கிடையே, சூடானில் சிக்கித் தவித்த 9 தமிழர்கள் உள்பட 360 பேர் டெல்லி வந்தடைந்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். விமான நிலையங்களுக்கு வந்தவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

    இந்நிலையில், சூடானில் இருந்து நேற்று 17 தமிழர்கள் உள்பட மேலும் 246 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.

    • இந்தியா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுடானில் சிக்கித் தவிக்கின்றனர்.
    • இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.

    வடகிழக்கு ஆப்பிரிக்க நாடு சூடான். ராணுவ ஆட்சி நடந்து வரும் இந்த நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் காரணமாக பெரும் கலவரம் மூண்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர்.

    உள்நாட்டு போரில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். உள்நாட்டு போர் காரணமாக இந்தியா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுடானில் சிக்கித் தவிக்கின்றனர். சுடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.

     

    இதைத் தொடர்ந்து சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் துவங்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களை மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சூடான் துறைமுகத்தில் சுமார் 500 இந்தியர்கள் வந்தடைந்துள்ளனர்.

    "சுடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி திட்டம் துவங்கிவிட்டது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்தடைந்தனர். மேலும் பலர் வரவுள்ளனர். அவர்களை இந்தியா அழைத்துவர நமது கப்பல்கள் மற்றும் விமானம் தயார் நிலையில் உள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளையும் மீட்போம்," என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ×