சூடானில் இருந்து 17 தமிழர்கள் உள்பட மேலும் 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்

சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது. அங்கிருந்து மேலும் 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்.
சூடானில் இருந்து 17 தமிழர்கள் உள்பட மேலும் 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்
Published on

மும்பை:

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சூடானில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.

இதற்கிடையே, சூடானில் சிக்கித் தவித்த 9 தமிழர்கள் உள்பட 360 பேர் டெல்லி வந்தடைந்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். விமான நிலையங்களுக்கு வந்தவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

இந்நிலையில், சூடானில் இருந்து நேற்று 17 தமிழர்கள் உள்பட மேலும் 246 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com