search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சூடானில் மீட்கப்பட்டு இந்தியா வந்தவர்களில் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
    X

    சூடானில் மீட்கப்பட்டு இந்தியா வந்தவர்களில் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

    • உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்கள் ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
    • 7 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்கள் 'ஆபரேஷன் காவேரி' திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு இந்தியா வந்துள்ள நிலையில், அவர்களில் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மஞ்சள் காய்ச்சல் என்ற வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி போடாததுதான் காரணம்.

    தனிமைப்படுத்தலுக்காக, வருகை மையங்களில் விமான நிலைய சுகாதார அதிகாரிகளின் நிர்வாகத்திலும், மேலும் பல ஆஸ்பத்திரிகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் இலவசமாக தங்கவைப்படுவார்கள்.

    7 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×