search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Onam Special"

    • ஓணம் பண்டிகைக்கு 27 வகையான சாப்பாடுகளை தயார் செய்வார்கள்.
    • ஐந்தே நிமிடத்தில் சூப்பரான ஒரு அப்பம் தயார் செய்யலாம்.

    இந்த ஓணம் பண்டிகைக்கு 27 வகையான ருசியான சாப்பாட்டு வகைகளை செய்வார்கள் அப்பேரி, பருப்பு கறி, வாழைக்காய் பொறியல், மாம்பழ பச்சடி, காலன், புளி, இஞ்சி ஜாம், அன்னாசி பச்சடி என்று பலவிதமான பலகாரங்கள் செய்து சாப்பிடுவார்கள். அதேபோல் ரவா அப்பம் செய்து கடவுளுக்கு படைத்து சாப்பிடுவர்.

    சமையல் அறையில் சர்க்கரையும், ரவையும் இதனுடன் சேர்க்கக் கூடிய இன்னும் சில பொருட்களும் கட்டாயமாக நம் வீட்டில் இருக்கும். அதை வைத்து வெறும் ஐந்தே நிமிடத்தில் சூப்பரான ஒரு அப்பம் தயார் செய்யலாம் அதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை- ஒருகப்

    சர்க்க்ரை- 2 கப்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- ஒரு சிட்டிகை

    முந்திரி, திராட்சை

    நெய்

    செய்முறை:

    ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்தது அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய்விட்டு அதில் ரவையை நன்ற வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதிக்கும் போது ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டி இல்லாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    ரவையை கிளறி 5 நிமிடம் மூடி போட்டு வேகவிட வேண்டும். 5 நிமிடம் கழித்து அதில் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை, நெய் சேர்த்து ஒன்றாக கலந்து கிளற வேண்டும்.

    பின்னர் இந்த கலவையை ஒரு பிளேட்டில் கொட்டி ஆறவிட வேண்டும். இந்த கலவை ஆறியதும் இதனை உருண்டைகளாக உருட்டி அதனை வட்டமான வடிவில் அதிரசம் போன்று தட்டி ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது. தட்டி வைத்த அப்பத்துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக பொறித்து எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும். சுவையான ரவா அப்பம் தயார். சூடு ஆறியதும் பரிமாறவும். இதனை சாமிக்கு நைவேத்தியம் செய்து அதன்பிறகு சாப்பிடுங்கள்.

    • தாம்பரம் - எர்ணாகுளம் வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி வரை வியாழன் தோறும் இயக்கப்படும்.
    • ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்த ெரயில் இயங்கும்.

    திருப்பூர்:

    ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் (எண்:06053) வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி வரை வியாழன் தோறும் இயக்கப்படும். மதியம் 3 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 3:30மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

    எர்ணாகுளத்தில் புறப்படும் ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக எர்ணாகுளம் - தாம்பரம் ரெயில் (எண்: 06504) வெள்ளிதோறும் காலை 8:30மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 11:15மணிக்கு தாம்பரம் சென்று சேரும். ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்தரெயில் இயங்கும்.

    இந்த ரெயில்களில் ஒரு முதல் வகுப்பு ஏ.சி., 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி., தலா 6 ஏ.சி., மற்றும் படுக்கை வசதி, 2 பொது பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×