என் மலர்
நீங்கள் தேடியது "Officer death"
- சீமான் தேளூர் மின்சார வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
- உடையார்பாளையம் வார சந்தை பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டர் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் மேலவளி பகுதியைச் சேர்ந்த சீமான்.இவர் தேளூர் மின்சார வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் வார சந்தை பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டர் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சீமான் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீமான் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
மயிலாப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
எண்ணூர் அருகே அப்பர்சாமி கோவில் அருகே சென்ற போது கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவிக் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.






