என் மலர்
நீங்கள் தேடியது "Nithyanandha"
- விசாரணையின்போது நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? நீதிமன்றம் கேள்வி.
- நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு செய்யப்பட்டு நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
மருத்துவரின் இடத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற ஆர்.டி.ஓ. ஆணையிட்டார். வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா ஆசிரமம் சார்பில் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தது.
திருவண்ணாமலை நித்தியானந்த பீட அறங்காவலர் சந்திரசேகரன் என்பவர் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையின்போது நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது ? நீங்கள் அங்கு சென்றுள்ளீர்களா? அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட்டு, விசா ஏதும் உள்ளதா? போன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நித்யானந்தா ஆஸ்திரேலியா அருகில் உள்ள யுஎஸ்கே (United States of Kailasa) என்ற கைலாசா என்கிற தனி நாட்டில் உள்ளார். யுஎஸ்கே நாட்டிற்கு ஐநா சபையின் அங்கீகாரம் உள்ளது என நித்தியானந்தாவின் சீடர் பதில் அளித்தார்.
மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கறிஞரை மாற்ற நித்யானந்தா தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.
பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-
2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.
நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்துகிறேன். இதுவரை இதை சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. மீடூ இயக்கத்தால் துணிச்சல் வந்தது.
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
இவர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையின் போது நித்யானந்தாவுக்கு ஆதரவாக வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டார்.
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்துவரும் வெளி நாட்டவர் ஒருவரும் மீடூ வில் நித்யானந்தா என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நித்யானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.






