என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Zealand Women"

    • ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன் எடுத்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களம் இறங்கினர்.

    இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் ரன் எடுக்காமலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • துபாய் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதாகும்.
    • இங்கு 150 ரன்கள் எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) தங்கள் பிரிவில் முறையே 'டாப்-2' இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    முதலாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தும், 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து 8 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்தன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று இரவு நடக்கிறது. இதில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நியூசிலாந்து அணி 3-வது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 3 வெற்றி (இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வி (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) கண்டது. அரைஇறுதியில் வெஸ்ட்இண்டீசை விரட்டியடித்தது.

    நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் ஜார்ஜியா பிலிமெர், சுசி பேட்ஸ், கேப்டன் சோபி டிவைனும், பந்து வீச்சில் ஈடன் கார்சன், ரோஸ்மேரி மைர், லீ தஹூஹூவும் வலுசேர்க்கிறார்கள். ஆல்-ரவுண்டராக அமெலியா கெர் அசத்துகிறார்.

    தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து கோப்பையை தவறவிட்டு இருந்தது. லீக் சுற்றில் 3 வெற்றி (வெஸ்ட்இண்டீஸ், ஸ்காட்லாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டு இருந்த தென்ஆப்பிரிக்க அணி அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு ஆப்பு வைத்தது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் கேப்டன் லாரா வோல்வார்ட், தஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ்சும், பந்து வீச்சில் மிலாபாவும், ஆல்-ரவுண்டராக மரிஜானா காப்பும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் அந்த அணி இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    இந்த தொடரில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள இவ்விரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் யார் வாகை சூடுவார்கள் என்பதை கணிப்பது கடினம். அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை சாய்த்த நம்பிக்கையுடன் தென்ஆப்பிரிக்க அணி களம் இறங்குகிறது. முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    துபாய் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதாகும். இங்கு 150 ரன்கள் எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 16 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 11-ல் நியூசிலாந்தும், 4-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின.
    • டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.

    இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் முன்னேறின. நியூசிலாந்து அணி 3-வது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத 2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதால் யார் தங்களது முதல் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.

    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிகா பெண்கள் அணி. #ENGWvSAW
    இங்கிலாந்தில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்க வீராங்கனை டாமி பியூமோன்டின் (59 பந்தில் 71 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது.

    பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். அந்த அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் லூயஸ் முதல் இரண்டு பந்திலும் பவுண்டரி அடித்ததுடன், 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றிபெற வைத்தார். இவரது ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    தொடக்க வீராங்கனையும் விக்கெட் கீப்பரும் ஆன லீ 37 பந்தில் 68 ரன்களும், லூயஸ் 52 பந்தில் 63 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

    மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து வீராங்கனைகள் மோதினார்கள். இதில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

    பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து வீராங்கனைகள் 118 ரன்னில் சுருண்டார்கள். இதனால் இங்கிலாந்து பெண்கள் அணி 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×