என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New College"

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
    • 2025-26-ஆம் கல்வியாண்டில் இருந்தே செயல்படும் புதிய கல்லூரிகள்.

    மார்ச் மாதம் தான் பட்ஜெட்டில் அறிவித்தோம், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிவிட்டோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மார்ச் மாதம்தான் TNBudget2025-இல் அறிவித்தோம்! சற்றும் தாமதியாமல் இந்த 2025-26-ஆம் கல்வியாண்டில் இருந்தே செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகளையும் தொடங்கிவிட்டோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவர்களைக் கொண்டு புதிய நர்சிங் கல்லூரி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
    • 40 மாணவர்களுடன் தொடங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுவையில், நடப்புக் கல்வி ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் மருத்துவக் கல்லூரி குழுமத்தின்கீழ் நர்சிங் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியுள்ளார். செவிலியர் கல்லூரி, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் 60 மாணவர்களைக் கொண்டு புதிய நர்சிங் கல்லூரி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

    மேலும் காரைக்கால் பகுதியில் சுகாதாரத் துறையின் மூலம் நர்சிங் கல்லூரி, அன்னை தெரசா பட்டமேற்படிப்பு - சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் 40 மாணவர்களுடன் தொடங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    ×