search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nanguneri union"

    • நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் கிரா மத்தில் அமைந்துள்ள சுடுகாடு மூலமாக அப்பகுதி யை சுற்றிலும் அமைந்துள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஈமச் சடங்குகள் செய்து வருகின்றனர்.
    • அங்கு செல்வதற்காக அந்த பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாடு மூலமாக அப்பகுதியை சுற்றிலும் அமைந்துள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஈமச்சடங்கு கள் செய்து வருகின்றனர். அங்கு செல்வ தற்காக அந்த பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் நாங்கு நேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கை யை ஏற்று இன்று ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்ப தற்கான பூஜை செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர், இந்த மாத இறுதிக்குள் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. அந்த கிரா மத்தில் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிக ளையும் ஆய்வு செய்துள்ளோம் என்றார். அப்போது செண்பக ராம நல்லூர் பஞ்சாயத்து தலை வர் முருகம்மாள், தி.மு.க. அவைத்த லைவர் செல்ல த்து ரை, நிர்வா கிகள் விநாயகம், மாடசாமி, அனுமார், புதுக்கு ளம் சிவா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • கீழூரில் ஊராட்சி ஒன்றிய நிதி ரூ.2.90 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • ஆனையப்பபுரம் கிராமத்தில் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் தளபதிசமுத்திரம் கீழூரில் ஊராட்சி ஒன்றிய நிதி ரூ.2.90 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடந்தது. நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆகியோர் ரிப்பன் வெட்டி, புதிய மின்மாற்றியை திறந்து வைத்தனர்.

    தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் அருள்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெபக்கனி செந்தில், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பருத்திப்பாடு ஊராட்சி ஆனையப்பபுரம் கிராமத்தில் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகத்தை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தொடங்கி வைத்தார். பருத்திப்பாடு பஞ்சாயத்து தலைவர் ஊசிக்காட்டான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×