search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nainarkulam"

    • சப்பாணிமாடன் கோவில் பகுதியில் ஒருவாரமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
    • கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் கே.ஆர். ராஜூ, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தச்சநல்லூர் ஆனந்தபுரத்தை சேர்ந்த நயினார்குளம் நீர்ப்பாசன உதவி செயலாளர் முருகன் தலைமையில் கொடுத்த மனுவில், நயினார் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய டவுன் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அருகில் குடியிருப்போர் அங்கு குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அதனை தடுக்கும் விதமாக அங்கு டைமண்ட் கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், சப்பாணிமாடன் கோவில் பகுதியில் ஒருவாரமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர். கொக்கிரகுளம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் இளங்கோவடிகள் தெரு, 14 வார்டு அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வாறுகால்களை தூர்வார வேண்டும் என கூறியிருந்தனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவு நீர் ஓடைகள் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கின்றன.
    • அந்த பகுதியில் உள்ள கழிவு நீரோடையை ஒட்டி அமைந்துள்ள கடை உரிமையாளர்கள் கோரிக்கையின் படி சிறிய ரக பொக்லைன் மூலமாக கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவு நீர் ஓடைகள் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கின்றன. இது தொடர்பாக அந்தந்த பகுதி வார்டு கவுன்சிலர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் ஓடைகளை தூர்வார கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் நெல்லை டவுன் 25-வது வார்டுக்கு உட்பட்ட நயினார் குளம் சாலையில் உள்ள கழிவு நீரோடை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகளை சரி செய்ய வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் இன்று மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கழிவு நீர் ஓடை தூர்வாரும் பணி நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் இளங்கோ செய்திருந்தார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கழிவு நீரோடையை ஒட்டி அமைந்துள்ள கடை உரிமையாளர்கள் கோரிக்கையின் படி சிறிய ரக பொக்லைன் மூலமாக கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • மீன்கள் சுமார் 3 கிலோ முதல் 4 கிலோ வரை இருந்தது.
    • மொத்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகரின் மையப்பகுதியில் டவுன் நயினார்குளம் அமைந்துள்ளது. மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்ட நீரினால் இந்த குளத்தில் தண்ணீர் நிறைந்திருந்தது. இதனால் குளத்தில் மீன் குஞ்சுகள் விடுவதற்கு குத்தகைக்கு விடப்பட்டது.

    தற்போது கடுமையான வெயிலின் காரணமாக குளத்தில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டதால் அதில் வளர்ந்திருந்த மீன்களை பிடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை நேரத்தில் மீன்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

    இதில் ஒவ்வொரு மீனும் சுமார் 3 கிலோ முதல் 4 கிலோ வரை இருந்தது. அவற்றை மொத்த வியாபாரிகள் அங்கிருந்து வாங்கிச் சென்றனர்.

    ×