search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MJAkbar"

    எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலே தெரிவித்துள்ளார். #RamdasAthawale #MeToo #MJAkbar
    புதுடெல்லி :

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண்கள் புகார் செய்தனர். ‘இது பொய்யானது, கற்பனையானது’ என அவர் மறுத்துள்ளார். புகார் பற்றி மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலேவிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-



    பெண்களை துன்புறுத்தும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் நானா படேகர், எம்.ஜே.அக்பர் போன்று பிரபலமானவர்களாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்பர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், ‘மீ டூ’ சிலரை பொய் புகாரில் சிக்கவைக்கும் தலமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது என்பது எனது கருத்து. அதுபோன்ற புகார்கள் குறித்து போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் அதவாலே கூறினார். #RamdasAthawale #MeToo #MJAkbar
    ×