search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mitticool products"

    உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
    மண்பாண்டங்கள்... மனித குலம் தோன்றியது முதலே இதன் பயன்பாடு இருந்து வருகிறது.

    உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களான மண்பாண்டங்களில் உணவைச் சமைத்து உற்சாகமான மனநிலையில் அன்பை கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் நவீன மயம் புகுந்ததுதான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம்.

    உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. மண்பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமி னியம் எனத் தொடர்ந்து தற்போது... ஈசியாக செய்யக்கூடிய உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் வந்துவிட்டன.

    அதுவே சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் வீக்கம், நுரையீரல் தொற்று, விரை வில் முதுமை என பல வியாதிகளுக்கும் காரணமாகின்றன.

    நான்ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் ரசாயனம் உணவில் கலந்து உடலை பாதிக்கிறது. அதனால் கருப்பை கோளாறு, புற்றுநோய், குழந்தையின்மை என பல நோய்களுக்கும் வித்திடும்.

    மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள் இன்று காட்சிப்பொருள்களாக மாறிவிட்டன.
    விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக் கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

    இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.நமது தாத்தா பாட்டி காலத்தில் அதுதான் பிரதான உணவு சமைக்கும் பொருட்கள்.  இன்றையமக்கள் அலுமினி யம், சில்வர், மைக்ரோ ஓவன், பிளாஸ்டக் பைபர் ரகங்கள் என நவீனத்தின் பிடியில் உள்ளார்கள்.

    ஆனால் இதில் சமைக்கும் உணவைவிட பலமடங்கு உயிர்சத்தும் ஆற்றலும் கொண்டது மண்பாண்ட சமையல். அக்காலத்தில் நோயின்றி அதிக காலம் உயிர் வாழ்ந்தமைக்கு மண்பாண்டம் பயன்பாடு பெறும் பங்கு வகிக்கிறது.

    மண்பானையில் சமைக்கும் போது வெப்பம் சமச்சீராக பரவுகிறது, மேலும் இதில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று ஊடுருவி உணவை சமைக்க உதவுகின்றது. அதனால் ஆவியால் வேக வைத்த பக்குவம் கிடைப்பதால் சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உயர்தர உணவாக அமைகிறது.

    அத்துடன் மண்பாண்டம் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்துகிறது, உப்பு, புளிப்பு சுவைகளை சமைக்கும் போது எந்த தீங்கான விளைவும் ஏற்படுத்தாமல் கட்டுபடுத்துகிறது. அதுபோல் அதிக எண்ணெய் பயன்படுத்த தேவையிருக்காது. உணவின் சுவையும் தன்மையும் கூடுவதோடு ஆரோக்கயத்திற்கும் உகந்ததாக இருக்கறது.

    இதில் வைக்கும் தயிர் மற்றும் மாவு வகைகள் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இயல்பாக மண்ணில் அதீத உயிர்சத்துக்கள் இருக்கும். ஆதலால் மண்பாண்டத்தில் சமைக் கும் உணவு பதார்த்தங்களில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். மற்ற உலோகப் பாத்திரங்களில் சமைத்த உணவு பலவகை நச்சுத்தன்மையை கொண்டதாக இருக்கிறது என ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கிறது. மண்பாண்டம் அப்படியில்லை முற்றிலும் பாதுகாப்பானது.

    இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவுப்ப பொருட்களை கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது. அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உப யோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.

    மேலும் அவர்கள் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப் படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண் ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன. காலப்போக்கில களிமண் பாத்திரங்களை பராமரிக்க முடியாததால் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் இன்று வரை அசைவ உணவுகளையும், கூழ் வகைகளையும் களிமண் பாத்திரத்தில் செய்தால் அதன் ருசியும் சத்தும் கூடும் என்பதால் பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    அம்மிகளும், உரல்களும் மிக்ஸி, கிரைண்டர்களாக மாறிவிட்டன. தற்போது ஆங்காங்கே களிமண்ணால் ஆன பாத்திரங்கள் காணப்பட்டாலும் அவற்றை வெகு சிலரே வாங்கிக் கொள்கின்றனர்.



    தற்போது மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியனசந்தையில் கிடைக்கின்றன. இவை ராஜஸ்தான், குஜராத்தில் செய்யப்படுகின்றன.

    கரண்ட் இல்லாத பிரிட்ஜ்

    மின்சாரம் பயன்படுத்தாமல் பிரிட்ஜ், அதுவும் களிமண்ணால் செய்யப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 20 கிலோ கொண்ட அந்த பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களை வைத்தால் கெட்டு போகாமல், பிரஷ்ஷாக இருக்கும். மண் பானை குக்கர், வாட்டர் பாட்டில், தயிர் கப்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் உள்ளன. அவை குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உள்ளன.

    தற்போது விவசாயப் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகள் தெளித்து, செயற்கை உரங்கள் இடுவதால் உணவே விஷமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது இயற்கை சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்பாண்டப் பொருள்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
    குடிநீர் சுத்திகரிப்பான்

    கோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. தற்போது அக்னி நட்த்திரத்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றோடு தகிக்கிறது.

    வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.

    இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன.

    மண் பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.

    10 லிட்டர் தண்ணீர் மண்பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, லு தேக்கரண்டி சீரகம், இவை அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.
    காலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.

    சாதாரணமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும். அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது.

    இன்றும் கிராம மக்கள் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம். இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்த காலை உணவாகும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
    ×