search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Millets vs Oats"

    உடல் எடையை குறைக்க ஓட்ஸ், சிறுதானியங்களை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓட்ஸ், சிறுதானியம் இவற்றில் எது சிறந்தது எது என்று பார்க்கலாம்.
    வேகமாக ஓடும் உலகில் காலை உணவை தவிர்ப்பதை காரணம் காட்டி பல ரெடி டு ஈட் உணவுகள் நுழைந்து விட்டன. கார்ன் ஃப்ளேக்ஸ், கப் நூடுல்ஸ், பாதி சமைத்த உணவுகளாக மாறிவிட்டது. அதிலும் சத்து, எடை குறைப்பு என்ற பெயரில் நம் ஊர் உணவையே மறந்து விட்டோம்.

    அப்படி தொடங்கியது தான் ஓட்ஸ் மோகம். போலந்து, ஆஸ்திரேலியா, மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் விளைவது தான் ஓட்ஸ். அதை இங்கே இறக்குமதி செய்ய அதன் நன்மைகளை அடுக்கி விட்டனர்.

    இதன் விளம்பரங்களை கண்டு நாமும் சமையல் அறையில் அதற்கு ஓர் இடத்தை கொடுத்து விட்டோம்.

    ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். இது உடல் ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயம். எடை குறைப்புக்கு ஓட்ஸை உட்கொள்வது நல்லது தான். ஆனால் அது விரைவில் செரிமானம் ஆவதால், பசிக்கு நாம் அதிகம் சாப்பிட வாய்ப்பும் உள்ளதாம். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடுமே!

    அதற்கு சுவை இல்லாததால் சர்க்கரை, ஸ்ட்ராபெரி, வாழை என ஃப்ளேவர்களை சேர்த்து விட்டனர். சுவைக்காகப் பல விஷயங்களை அதிகமாக ஓட்ஸோடு சேர்த்தால், ஓட்ஸின் பயன் முழுமையாக உடம்புக்குக் கிடைக்காது.



    அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸை விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம்.

    அதைவிட கம்பு, சோளம், திணை, வரகு, சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. இவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. விலையும் குறைவு!

    100 கிராம் கம்பில், 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது, உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் எளிதில் குறைக்கும். ராகி உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.

    வெளிநாட்டில் விளையும் சாதாரண பயிரை நம் சந்தையில் சேர்த்து விட்டார்கள். ஆனால் நாமோ நம் பருவநிலைக் கேற்ற சீரான உணவு விட்டு விட்டோம்.

    எது எப்படியோ எப்பவும் வீட்டில் எண்ணெய் இல்லாமல் ஃப்ரெஷாக செய்யபப்டும் இட்லிக்கு இணை எதுவுமில்லை. அவற்றில் கிடைக்கும் சத்துக்கள் வேறு எதுவுமில்லை. 
    ×