search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "milk merchant"

    பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வேடசந்தூர் அருகே பால் வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கினார். #Plasticban
    திண்டுக்கல்:

    தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு நேற்று முதல் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு, வணிகர்கள் மாற்று வழியை கையாண்டு வருகின்றனர்.



    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒரு பால் வியாபாரி, பாலித்தீன் பைகளை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பாத்திரங்களை வழங்குகிறார்.

    வேடசந்தூர் அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் தனபால் (வயது 39). பால் வியாபாரி. இதற்காக வேடசந்தூர்-வடமதுரை சாலையில் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருசிலர் பாத்திரம் கொண்டு வருவது இல்லை.

    மேலும் பாலித்தீன் பைகளில் பால் வாங்கி செல்வோரும் உண்டு. இதற்கிடையே தமிழக அரசு பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தது. இதனால் தனபால் தனது வாடிக்கையாளர்களுக்கு பாலித்தீன் பைகளை வழங்குவதை நிறுத்தினார். அதேநேரம் வழக்கத்தை மாற்றி திடீரென பால் வாங்குவதற்கு பாத்திரம் கொண்டு வரும்படி வற்புறுத்தினால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்து விடுவார்கள் என தனபால் நினைத்தார்.

    மேலும் பாலித்தீன் பையை பயன்படுத்துவதை தவிர்ப்பதில் உறுதியாக இருந்தார். எனவே, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எவர்சில்வர் பாத்திரம் வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று பால் வாங்க வந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எவர்சில்வர் பாத்திரங்களை (தூக்குவாளி) வழங்கினார். அதில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பாலின் அளவுக்கு ஏற்ப எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கி அசத்தினார்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பாத்திரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தினார். #Plasticban
    கடையம் அருகே பால் வியாபாரி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் பச்சைமால் (வயது50) பால் வியாபாரியான இவர் பால் கறப்பதற்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருவார். அதே போல் நேற்று கோவிந்தபேரி கிராமத்திற்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் இன்று காலை வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் மந்தியூர் ரோட்டில் உள்ள ஒரு கோவில் அருகே ராமநதி கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் பிணமாக கிடப்பது இன்று காலை தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது பிணமாக கிடந்தது மாயமான பால்வியாபாரி பச்சைமால் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பச்சைமாலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் வரும்போது கால்வாய்க்குள் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொன்று உடலை கால்வாயில் வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது.

    அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கிடந்த பச்சைமாலுக்கு 2 மனைவிகளும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    ×