என் மலர்

  நீங்கள் தேடியது "Middle"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் உள்ளன.
  • மின்கம்பங்களை மாற்றி வைக்க மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  செங்கோட்டை:

  செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் செங்கோட்டை காமராஜர் சாலை பக்கத்தில் பூத்திரம் தெரு உள்ளது. இத்தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியையொட்டி வயல்கள் உள்ளதால் இப்பகுதியினர் இவ்வழியாக வயல்வெளிகளுக்கு விவசாய பொருட்கள் கொண்டு செல்வார்கள். இத்தெருவிற்கு செல்லும் வழியில், சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் உள்ளன.

  இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், விவசாய பணிகளுக்காக செல்லும் வாகனங்களுக்கும் மிகுந்த சிரமத்துடன் செல்லும் அவலநிலை உள்ளது. மேலும் விழா காலங்களிலும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அனைத்து தரப்பு மக்களின் நலன்கருதி சாலையின் நடுவில் அமைந்துள்ள 2 மின்கம்பங்களையும் ஓரமாக மாற்றி வைக்க மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ×