search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mentally Challenged Women"

    • திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிந்து வருகிறார்கள்.
    • மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரியும் இளம் பெண்களை இரவு நேரங்களில் ஒரு சில சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிந்து வருகிறார்கள்.மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து ரெயில்களிலோ, பஸ்களிலோ ஏறி திண்டுக்கல் பஸ் நிலையம், நாகல் நகர், ரெயில்வே நிலையம், பழைய கரூர் சாலை, பழனி சாலை ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சுற்றி திரிகின்றனர்.

    இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவர்களுடைய குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது.அவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ எதேச்சையாக அவர்களை பார்க்க நேரும்போது, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து மீட்டு செல்கிறார்கள்.

    மற்றபடி இதுபோன்றவர்களை அவர்களுடைய குடும்பத்தினரிடம் சேர்ப்பது சவாலான காரியமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரியும் இளம் பெண்களை இரவு நேரங்களில் ஒரு சில சமூக விரோதிகள் மது மற்றும் கஞ்சா போதையில் இவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதும் தொடர்கதையாக உள்ளது.

    ஆகவே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒடிசாவில் உள்ள காப்பகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 300 பேர் விளக்கு ஏற்றியும் மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
    புவனேஸ்வர்:

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களைப் பொருத்தவரை  பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். பெரும்பாலான மக்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். சிலர் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் விடுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.



    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மிசன் அஷரா என்ற காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேர் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்று தீபாவளி பண்டிகையை அனுபவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி மிஷன் அஸ்ரா இல்லம் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு, பிரமாண்டமாக விழா நடத்தப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விளக்கு ஏற்றியும் மத்தாப்புகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
    ×