search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marine card"

    தொண்டி அருகே கடல் அட்டை, கடல் பல்லி ஆகியவற்றை கடத்தியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம். தொண்டி கடலோர பகுதியில் வனச்சரகர் சதீஷ் உத்தரவின்படி வனவர் சுதாகர், வனக் காப்பாளர்கள் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர் செல்வராஜ், விஜயபாஸ்கர் ஆகிய வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி அருகே தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்தவரை சோதனையிட வனச்சரக காவல் படையினர் நிறுத்திய போது நிறுத்தாமல் வேகமாகச் சென்றார்.

    அங்கிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் வரை வனத்துறையினர் சினிமா பாணியில் துரத்தி வந்து தொண்டியில் மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் விசாரித்த போது தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த சித்திக் மகன் முகம்மதுஅலி (28) என் பது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டை, 5 கிலோ கடல் குதிரை மற்றும் 1 கிலோ கடல் பல்லியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 50 ஆயிரம் ஆகும்.

    கைதான முகமதுஅலியை திருவாடானை நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். நீதிபதி பாலமுருகன் அவரை 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டார். #tamilnews
    ×