search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manuneethi day Camp"

    • பளியர் இன மக்கள் வசிக்கும் கலைமான் நகரில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.
    • முகாமில் மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.24.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள பளியர் இன மக்கள் வசிக்கும் கலைமான் நகரில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கடையநல்லூர் நகர் மன்றத்தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் ஷீலா, ஆர்.டி.ஓ. கங்காதேவி, தாசில்தார் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை கடைக்கோடி மக்களுக்கும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கென ஒவ்வொரு மாதமும் மனுநீதி நாள் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் அந்தந்த கிராம மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அவை மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என பரிசீலனை செய்து மனுநீதி நாள் அன்று தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் இந்த முகாமில் மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.24.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன், நகர்மன்ற கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீரான் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு, அதிகாரிகள் தரப்பில் பதில் தரப்பட்டது.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கிடாரக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிக்குவைத்தான் கிராமத்தில், மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

    வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டாட்சியர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி வரவேற்றார்.

    பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு, அதிகாரிகள் தரப்பில் பதில் தரப்பட்டது. தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முகாமில், சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் செல்வி பத்மகுமாரி, வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்சமது, வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம், கால்நடை மருத்துவர் ராமசெல்வம், தலைமைக் காவலர் செந்தில்ராணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாதவி ஆனந்தராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெகத்குரு, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×