என் மலர்

  நீங்கள் தேடியது "Manikkaraja"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தரும் டி.டி.வி. தினகரனை பிரம்மாண்டமான முறையில் வரவேற்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
  • நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா வழங்கினார்.

  கடையநல்லூர்:

  தென்காசி மாவட்டத்தில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்கிறார்.

  ஆலோசனை

  அவரை வரவேற்பதற்கான கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடையநல்லூர் மாவட்ட அலுவலகத்தில் மாநில தேர்தல் பிரிவு செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் யூனியன் தலைவருமான மாணிக்கராஜா தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத், தெற்கு மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன், அவைத் தலைவர்கள் ஹைதர் அலி,இப்ராஹிம்ஷா, இணை, துணைச் செயலாளர்கள் கலா, பிச்சம்மாள், பூசைதுரை, சுமதிகண்ணன், கோமதி, அருனகிரி சாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

  மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ரெஸ்கல்லாஹ் வரவேற்றார். கூட்டத்தில் வருகின்ற 15, 16-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தரும் டி.டி.வி. தினகரனை பிரம்மாண்டமான முறையில் வரவேற்று ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா வழங்கினார்.

  கூட்டத்தில் நகர செயலாளர்கள் வேலுச்சாமி, முத்துவேல், மாரியப்பன், வில்சன் ராமச்சந்திரன் உட்பட தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, பேரூர் ,ஒன்றிய, கிராம ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பி னர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வேல்சாமி நன்றி கூறினார்

  ×