search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manapparai area"

    மணப்பாறை பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    மணப்பாறை:

    மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 

    இதில் நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிபட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழைய காலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகபட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூர், சின்னமனப்பட்டி, பெரியபட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரை குத்திப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    மேலும் படுகளம் பூசாரிபட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணைïர், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியபட்டி, தாதனூர், வளநாடு கைகாட்டி, தொட்டியபட்டி, மினிக்கிïர், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துக்குழி, வேம்பனூர், வலசுப்பட்டி, பன்னாங்கொம்பு குடிநீர் பீடர், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பன்னபட்டி, தாதமலைப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, பொய்கைப்பட்டி, ராயம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு (வடுகபட்டி) ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 

    இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
    மணப்பாறை:

    மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த  சிலமாதங்களாக நடைபெற்றுவரும் கொள்ளை மற்றும்வழிப்பறி சம்பவங்களை தடுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. கட்சி அலுவலகத் தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு  ஒன்றியச் செய லாளர் சரவணன் தலைமை தாங்கினார். 

    அவைத் தலைவர் சந்திர சேகர் வரவேற்றுப் பேசினார். மாவட்டக்கழகச் செயலாளர் வக்கீல்  கிருஷ்ணகோபால், மாவட்ட அவைத்தலைவர் பாரதிதாசன்  ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர். இதில் தே.மு.தி.க 14-ம் ஆண்டு கட்சி தொடக்க விழா, செப்டம்பர் 16- ல் திருப்பூர் மாநில மாநாடு,  தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்விழா குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் மணப்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி  மற்றும் கொள்ளை சம்ப வங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில் மக்கள் காவல் துறையினர் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது. 

    மேலும் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் மக்கள் வெளியில் செல்லக் கூட அச்சப்படும் நிலை உள் ளதை  கருத்தில்  கொண்டு  சம்மந்தப்பட்ட  காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து  நடவடிக்கை எடுத்து குற்ற சம்பவங்களை தடுப்பதற் கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

    கடந்த ஒன்றரை ஆண்டிற் கும் மேலாக மணப் பாறை நகராட்சியில்  ஆணையர் இல்லாத  சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்  திட்டப்பணிகள் தடைபட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு உடனடியாக ஆணையரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் வேல் முருகன், வசந்த் பெரிய சாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முல்லை சந்திர சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் குமார் நன்றி கூறினார்.
    ×