search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Make My Trip"

    • பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு, லட்சத்தீவு செல்பவர்களின் வருகை அதிகரிப்பு
    • மாலத்தீவுகளுக்கான விமானங்கள் மற்றும் டிக்கெட்டுகளை ரத்துசெய்யுமாறு பயணர்கள் கமெண்ட்

     பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சமீபத்தில் லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அந்த தீவின் அழகிய கடற்கரைகள், சாகச பொழுதுப்போக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். இந்த வீடியோ, புகைப்படங்கள் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியின் வீடியோ, புகைப்படங்களை லைக்' செய்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து, ஆன்லைன் பயண நிறுவனமான மேக் மை ட்ரிப் தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி லட்சத்தீவு வந்ததை தொடர்ந்து, லட்சத்தீவு தொடர்பான தேடல்கள் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேக் மை ட்ரிப்-ன் இந்த பதிவு, ஒரு மணி நேரத்திற்குள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் விமர்சனம் தெரிவித்ததால், "மாலத்தீவுகளுக்கான விமானங்கள் மற்றும் டிக்கெட்டுகளை ரத்துசெய்யுமாறு பயணர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மேக் மை ட்ரிப்-ன் தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டி, "எங்கள் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டு நிறுவனம். பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அதிகாரிகளின் சர்ச்சை கருத்துக்கு மத்தியில், மாலத்தீவுக்கான எந்த முன்பதிவையும் ஏற்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். அயோத்தி மற்றும் லட்சத்தீவுகள் சர்வதேச இடங்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    இந்தியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக கோவா கடற்கரை உள்ளது. தற்போதைய சூழலில் துபாய், மாலத்தீவு, கோவா கடற்கரைகளை பின்னுக்குத் தள்ளி உலகத்தின் கவனத்தை லட்சத்தீவு ஈர்த்துள்ளது.

    ×