என் மலர்
நீங்கள் தேடியது "lodge gambling"
சென்னை:
வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விடுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் சூதாட்டம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அபுசுசியான், பெரியசாமி, வெங்கலியான், சதிஷ்குமார், சபீர், தமிம் அன்சாரி உள்ளிட்ட 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:
வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் உள்ள லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் லாட்ஜில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது 4 அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டையை சேர்ந்த ஜான்சன், புரசைவாக்கத்தை சேர்ந்த ஜோசப், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த முத்து, குன்றத்தூரை சேர்ந்த வெங்கடேஷ், கொளத்தூர் கங்கேஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூதாட்டம் நடந்த லாட்ஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலரான இவர் தினகரன் ஆதரவாளர் ஆவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளார்.






