என் மலர்

  நீங்கள் தேடியது "Labor shortage"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனைத்துப்பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
  • விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் வாடகைக்கு எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

  குடிமங்கலம்:

  உடுமலை, குடிமங்கலம் மடத்துக்குளம் வட்டாரங்களில் நீண்ட கால பயிராக தென்னை, மாமரங்கள் பராமரிக்கப்படுகிறது.மேலும் கரும்பு, வாழை, சின்னவெங்காயம் மற்றும் ஒவ்வொரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்துக்கு நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் தானியங்கள் சாகுபடியாகிறது.

  விவசாய சாகுபடியில் தற்போது அனைத்துப்பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.நடவு முதல் அறுவடை வரைகுறித்த நேரத்துக்குஆட்கள் கிடைக்காதது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, தென்னந்தோப்பு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதும் அதிகரித்துள்ளது.

  இருப்பினும் சிறு, குறு விவசாயிகள், காய்கறி சாகுபடியாளர்களுக்குசீசன் சமயங்களில்தொழிலாளர் கிடைக்காமல் பாதிக்கின்றனர். எனவே படிப்படியாக, சாகுபடி பணிகளுக்கு கருவிகளையும், எந்திரங்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

  காய்கறி சாகுபடியில் மேட்டுப்பாத்தி அமைத்து, இடைவெளியில் களையெடுக்க கோனோவீடர்கருவியை பயன்படுத்துகின்றனர். அதே போல் தென்னை, மாமரங்களுக்கு இடையே, களைச்செடி, பார்த்தீனிய செடிகளை அகற்ற கட்டர் எந்திரத்தைபயன்படுத்துகின்றனர்.இவ்வகை எந்திரத்தை சொந்தமாகவும் வாங்கி பயன்படுத்துகின்றனர். சில பகுதிகளில் விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் வாடகைக்கு எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

  விவசாயிகள் கூறுகையில், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய வகை கருவிகள் உதவுகிறது. களையெடுத்தல் பணிக்கு பரவலாக எந்திரங்களை பயன்படுத்துகிறோம். அதே போல் விதை, நாற்று நடவு பணிக்கு கருவிகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கருவி, எந்திரங்களை விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு, கிராமம்தோறும் வழங்கினால்அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

  ×