என் மலர்
நீங்கள் தேடியது "Kumar Kushagra"
- இந்தியாவின் குமார் குஷக்ராவை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
- தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இந்தியாவின் குமார் குஷக்ராவை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
ஏற்கனவே சமீர் ரிஸ்வி 8.40 கோடி ரூபாய்க்கும், ஷாருக் கான் 7.40 கோடி ரூபாய்க்கும், ஷர்துல் தாக்குர் 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.






