என் மலர்
நீங்கள் தேடியது "Kotmademu Panchayatillam"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கோட்டைமேடு இணைப்பில்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
- பள்ளி செயல்பாடுகளை இணை இயக்குநர் பாராட்டினார்.

ஊராட்சி மன்ற தலைவர் வேலுமயில்.
--------------------------------
கமுதி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிக ளில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களில் 3 பள்ளிகள் சிறந்த பள்ளி களாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கோட்டை மேடு இணைப்பில்லம் ஊராட்சியில் செயல்படும் ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
2-வது சிறந்த பள்ளி ராமநாதபுரம் மாவட்டம் வைரவன் கோவில் நடுநி லைப்பள்ளியம், 3-வது சிறந்த பள்ளியாக மண்டபம் ஒன்றியம் காந்திநகர் நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் சிறந்த பள்ளியாக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள கோட்டை மேடு இணைப்பில்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் மாநில கல்வித்துறை இணை இயக்குநர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் மற்றும் உதவி ஆசிரியர்கள் உஷாராணி, யோசிதா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல், ஒழுக்கம், பண்பு ஆகியவை குறித்து தெரிவித்தனர். பள்ளி செயல்பாடுகளை இணை இயக்குநர் பாராட்டினார்.
சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதற்கு நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில், பள்ளி மேலாண்மை குழு தலைவி தேவி, துணை தலைவி முனீஸ்வரி ஆகியோர் தலைமை ஆசிரி யரை பாராட்டினர். ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில் கூறுகையில், தொடக்கப்பள்ளி முதலிடம் பிடித்து சிறந்த பள்ளியாக தேர்வு பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அளவிலும் சிறந்த பள்ளியாக நிச்சயமாக மாறும் என்றார்.






