என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kohli Century"

    பெர்த் டெஸ்டில் ஸ்டார்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டி விராட் கோலி தனது 25-வது சதத்தை பதிவு செய்துள்ளார். ரகானே 51 ரன்னில் ஆட்டமிழந்தார். #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 82 ரன்னுடனும், ரகானே 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானே இன்றைய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். ஹனுமா விஹாரி நம்பிக்கையுடன் விளையாடினார்.



    எதிர்முனையில் விளையாடிய விராட் கோலி ஸ்டார்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 214 பந்தில் 11 பவுண்டரியுடன் சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் 25-வது சதம் இதுவாகும்.
    ×