search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Knitwear Manufacturers"

    • ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.55 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
    • தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    பின்னலாடை நிறுவனங்களில் தொழில்துறை (முத்திரை) அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். எடையளவு மற்றும் பொட்டல பொருட்கள் விதிமுறைகள் குறித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பதிவு பெறுவதால் கிடைக்கும் சலுகைகள் மற்றும் சட்ட பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு திருப்பூர் சைமா சங்க அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசந்தர், பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் சுகந்தி, எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் சட்ட விதிமுறைகள் குறித்து விளக்கி கூறியதுடன், தொழில்துறையினரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். தொழில்துறை முத்திரை ஆய்வாளர் செல்வக்குமார் பேசும்போது, 'அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்களும் பொட்டலப்பொருட்கள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.55 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும். பின்னலாடைகளை அனுப்பி வைக்கும் பெட்டிகளில் பெரிய பரப்பளவு உள்ள பகுதியில் 40 சதவீதம் அளவுக்கு, நிறுவனத்தின் விவரம், பனியனின் விலை, தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். பொட்டலப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் பதிவு செய்வது அவசியம்' என்றார்.

    வர்த்தக முத்திரை தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து வக்கீல் கிஷோர் பாலசுப்பிரமணியம் விளக்கி கூறினார். இதில் சைமா சங்க உறுப்பினர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதிக்கொள்கையை வெளியிட்டார்.
    • வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    திருப்பூர் :

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதிக்கொள்கையை வெளியிட்டார்.இதில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 50 அடிப்படை புள்ளி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரெப்போ வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:- ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வங்கி கடனுக்கான வட்டி விகிதமும் உயரும். தொடரும் வட்டி விகித உயர்வு மிகவும் கவலை அளிக்கிறது.திருப்பூர் நிறுவனங்கள் வங்கி கடன் பெற்றே பின்னலாடை ரகங்களை தயாரிக்கின்றன. வட்டி விகிதம் உயர்வு, நிறுவனங்களுக்கு சுமையை மேலும் அதிகரிக்கும்.ஏற்றுமதி நிறுவனங்கள், டாலர் உள்ளிட்ட அன்னிய செலாவணி பணத்தில் கடன் பெற்று ஆடை தயாரித்தால் வட்டி விகித உயர்வு பாதிக்காமல் தவிர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
    • அரசின் முயற்சியால் பஞ்சு விலை குறைய தொடங்கி இருக்கிறது.

    திருப்பூர்:

    பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:- இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல்:-

    நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் நூல் விலை குறைந்துள்ளது. நூற்பாலைகள் நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும். பஞ்சு விலை குறைந்து வருகிறது. அதற்கு ஏற்ப நூல் விலையையும் குறைத்து கடந்த மார்ச் மாத நூல் விலையை அறிவித்தால் பனியன் உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை தைரியமாக எடுத்து செய்ய முடியும். ஏற்கனவே நூல் விலை உயர்வால் ஆர்டர்களை பெற தயக்கம் காட்டியதால் திருப்பூரை தேடி வந்த ஆர்டர்கள் மாறி சென்று விட்டன. நூல் விலையை மேலும் குறைத்து நூற்பாலை உரிமையாளர்கள் திருப்பூர் பனியன் தொழில் மேம்பட ஒத்துழைக்க வேண்டும்.

    டீமா தலைவர் முத்துரத்தினம்:-

    இந்தியாவில் பருத்தி உற்பத்தி தற்போது இல்லை. புதிய பருத்தி பஞ்சு வர இன்னும் 3 மாதம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுவரத்து இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இருந்தபோதிலும் பஞ்சு விலை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பதுக்கல் பஞ்சை வியாபாரிகளிடமிருந்தோ, நூற்பாலைகளில் இருந்தோ வெளியே கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் விளைவாக வேறு வழியின்றி பதுக்கல் பஞ்சு வெளியே வர தொடங்கி இருக்கிறது. 40 லட்சம் பேல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

    அரசின் முயற்சியால் பஞ்சு விலை குறைய தொடங்கி இருக்கிறது. மேலும் நூல் விலை குறைந்தால் மட்டுமே பனியன் உற்பத்தியை தொடங்குவது என்று உற்பத்தியாளர்கள் ஒரு முடிவு எடுத்து உள்ளனர். இதன் காரணமாக நூற்பாலைகளில் 90 சதவீதம் நூல் விற்பனை சரிந்து விட்டது. இருப்பில் உள்ள நூல்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல் நூல் விலையை குறைக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விலை குறைவு என்பது போதாது. வானுயர நூல் விலையை உயர்த்தி விட்டு இப்போது கிலோவுக்கு ரூ.40 குறைத்தால் மட்டும் போதாது. இன்னும் நூல் விலையை குறைக்க வேண்டும். பதுக்கல் பஞ்சை வெளியே கொண்டு வந்து நூல் விலை சீராக இருக்க மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×