search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "keerai recipds"

    உளுந்தம் பருப்புடன் கீரை சேர்த்து வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த கீரை வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உளுந்தம்பருப்பு - 200 கிராம்
    முளைக்கீரை - கைப்பிடி அளவு
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    உளுத்தம்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்த மாவில் நறுக்கிய கீரை, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான உளுந்து கீரை வடை ரெடி.

    இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×