என் மலர்
நீங்கள் தேடியது "Kasimedu boat"
ஆந்திரா அருகே காசிமேடு படகு மீது சரக்கு கப்பல் மோதியது. படகில் தத்தளித்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராயபுரம்:
சென்னை காசிமேட்டை சேர்ந்த சின்னதுரைக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்பு ஆந்திரா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சரக்கு கப்பல் ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் படகு கவிழ்ந்து சேதம் அடைந்தது. படகில் இருந்த 11 பேரும் கடலில் தத்தளித்தனர். நடுக்கடலில் தத்தளித்த அவர்களை அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.
11 மீனவர்களும் உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் விசைப்படகு உரிமையாளர் புகார் அளித்தார். கடலில் மூழ்கிய படகினை மீட்டு தர வேண்டும். சேதம் அடைந்த படகிற்கு நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.