search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kandahar"

    • ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு.
    • காலை 8 மணியளவில் வங்கி வெளியே காத்திருந்த மக்களை குறிவைத்து குண்டு வெடித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    மார்ச் 11 அன்று இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், சில சம்பவங்களை தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மத்திய காந்தஹார் நகரத்தில் உள்ள நியூ காபூல் வங்கிக் கிளைக்கு வெளியே இன்று காலை 8 மணியளவில் காத்திருந்த மக்கள் குழுவை குறிவைத்து வெடித்துள்ளது.

    இதுகுறித்து கந்தஹார் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் இனாமுல்லா சமங்கானி கூறுகையில்" தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பொதுவாக மக்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதற்காக வங்கியில் கூடுகிறார்கள். அப்போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட நகரின் மருத்துவமனையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.

    இதற்கிடையே, தலிபான் அதிகாரிகள் வங்கிக்கு வெளியே உள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

    இருப்பினும், குண்டுவெடிப்பை அடுத்து ஆம்புலன்ஸ்களில் மயக்கமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் உடல்கள் ஏற்றப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர், அங்கு இரத்தம், உடைகள் மற்றும் காலணிகள் தரையில் சிதறிக்கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. அப்ரிடி, கெய்ல், மெக்கல்லம், ரஸல், ரஷித் கான் ஐகான் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். #APL
    இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்காள தேச கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடரை நடத்துவது போல் தற்போது ஆப்கானிஸ்தானும் ப்ரீமியர் லீக் டி20 தொடரை நடத்த உள்ளது.

    இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதில் பாக்டியா, காபுல், பால்க், நங்கர்ஹார், கந்தஹார் ஆகிய அணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி20 ஸ்பெஷலிஸ்ட் ஆன ஷாகித் அப்ரிடி, கிறிஸ் கெய்ல், ரஷித் கான், அந்த்ரே ரஸல், பிராண்டன் மெக்கல்லம் ஆகியோர் ஐகான் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஐந்து வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற வேண்டும்.
    ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர். #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
    காந்தகார்:

    ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்து உள்ளார். தலீபான்களும் முதல் முறையாக 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், அங்கு காந்தகார் மாகாணத்தில், அர்பான்தாப் மாவட்டத்தில் நேஹ்கான் பகுதியில் அமைந்து உள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்கு முன் பயங்கரவாதிகள், குருவிகளை சுடுவது போல அவர்களை சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினர்.இந்த தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.

    இந்த தாக்குதலை தலீபான் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை காந்தகார் போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் அது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

    இதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை ஹெராட் மாகாணத்தில் ஷின்டான்ட் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 17 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.  #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
    ×