என் மலர்
நீங்கள் தேடியது "Kalatheeswarar Temple"
- அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடக்கிறது.
- சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு- கேது பரிகார ஸ்தலமான ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடக்கிறது.
காலை 9 மணிக்கு கணபதி யாகத்துடன் தொடங்குகிறது. 11 மணிக்கு பூர்ணாகுதி, 12 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால், தயிர் இளநீர் பன்னீர் விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தேசிய தலைவர் ஸ்ரீ தரன்ஜி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குகிறார். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.
- நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மகா வித்யா கணபதி யாகம் நடைபெற்றது.
- இந்து மக்கள் கட்சி தேசிய தலைவர் ஸ்ரீ தரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி யாகத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு கேது பரிகார ஸ்தலமான நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 12மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தேசிய தலைவர் ஸ்ரீ தரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி யாகத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். யாகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ரவி கிருஷ்ணன், மாநில செய்தி தொடர்பாளர் பத்மஜா முருகையன், மாநில செயலாளர் கார்த்திகேயன், தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, தெற்கு மாவட்ட அனுமன் சேனா தலைவர் தங்கராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் லிங்கவேல் ஆதித்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலன், ஒன்றிய தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளை தலைவர் உதயகுமார், பொருளாளர் சிவமுருகன்,செயலாளர் தசீந்திரன் மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
- போதிய மழை இல்லாததால் உடன்குடி வட்டாரங்களில் குளங்கள் வரண்டு காணப்படுகின்றன.
- நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் போதிய மழை இல்லாததால் உடன்குடி வட்டாரங்களில் குளங்கள் வரண்டு காணப்படுகின்றன.கிணறுகளில் வெகுவாக தண்ணீர் குறைந்து வருகிறது. மேலும் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது
எனவே மாநிலம் முழுவதும் நல்ல பருவ மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு யாகம் செம்மறிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஷ்டா மரிய தங்கம் தலைமையில், காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளைகள் செயலாளர் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவனடியார் சிவமுருகன், காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன், தொழில் அதிபர் நோவா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.






