search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மகா வித்யா கணபதி யாகம்
    X

    யாகத்தில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காட்சி.

    நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மகா வித்யா கணபதி யாகம்

    • நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மகா வித்யா கணபதி யாகம் நடைபெற்றது.
    • இந்து மக்கள் கட்சி தேசிய தலைவர் ஸ்ரீ தரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி யாகத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு கேது பரிகார ஸ்தலமான நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 12மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தேசிய தலைவர் ஸ்ரீ தரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி யாகத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். யாகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ரவி கிருஷ்ணன், மாநில செய்தி தொடர்பாளர் பத்மஜா முருகையன், மாநில செயலாளர் கார்த்திகேயன், தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, தெற்கு மாவட்ட அனுமன் சேனா தலைவர் தங்கராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் லிங்கவேல் ஆதித்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலன், ஒன்றிய தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளை தலைவர் உதயகுமார், பொருளாளர் சிவமுருகன்,செயலாளர் தசீந்திரன் மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


    Next Story
    ×