search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Johannesburg"

    ஜோகன்ஸ்பர்க் ஓட்டலில் மாடல் அழகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் மனைவியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. #GraceMugabe
    ஹராரே:

    ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்தவர் ராபர்ட் முகாபே. அவருக்கு தற்போது 94 வயது ஆகிறது.

    கடந்த ஆண்டு புரட்சி மூலம் அவரது ஆட்சி அகற்றப்பட்டது. ராபர்ட் முகாபேவியின் 2-வது மனைவி கிரேஸ் முகாபே. 53 வயதான இவர் ராபர்ட் முகாபேவின் செயலாளராக இருந்து வந்தார். 1996-ல் ராபர்ட் முகாபே கிரேசை திருமணம் செய்து கொண்டார்.

    அதன்பிறகு கிரேசை அதிபராக்க முகாபே முயற்சி செய்தார். இதனால் தான் அவரது ஆட்சியை புரட்சி மூலம் வெளியேற்றினார்கள்.

    தற்போது ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் கிரேசும் இருப்பதாக தெரிகிறது. கிரேஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜோகன்ஸ்பர்க் ஓட்டலில் மாடல் அழகி கேபரில்லா என்பரை தாக்கினார்.

    தாக்கப்பட்ட மாடல் அழகி.

    மின்சார வயரால் சரமாரியாக தாக்கியதாகவும், இதில் காயம் அடைந்ததாகவும் கேபரில்லா கூறினார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கிரேஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கிரேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.

    இதையடுத்து ஜிம்பாப்வே போலீசார் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்வதற்காக வாரண்டை சர்வதேச அளவில் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே கிரேஸ் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. #GraceMugabe
    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் இன்று மகாத்மா காந்தி தனது அமைதி போராட்டத்தை தொடங்கிய பீனிக்ஸ் செட்டில்மெண்டில் செடிகளை நட்டினார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.


    இந்நிலையில், இன்று டர்பன் பகுதியில் உள்ள பாரம்பரிய இடமான பீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் செடிகளை நட்டினார். இந்த பகுதியில் தான் மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தை தொடங்கினார். காந்தியின் நினைவாக அங்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #Johannesburg  #BRICS
    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் இன்று தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரியுடன் ஆலோசனை நடத்தினார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை (4-ம் தேதி) நடைபெறவுள்ளது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லியில் இருந்து நேற்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

    இன்று ஜோகனஸ்பர்க் நகரை சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவுத்துறை துணை மந்திரி லுவெல்லின் லான்டர்ஸ்-ஐ சந்தித்த சுஷ்மா சுவராஜ் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #Johannesburg  #BRICS
    ×