search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி அகிம்சை போராட்டத்தை தொடங்கிய இடத்தில் செடிகள் வைத்த சுஷ்மா
    X

    காந்தி அகிம்சை போராட்டத்தை தொடங்கிய இடத்தில் செடிகள் வைத்த சுஷ்மா

    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் இன்று மகாத்மா காந்தி தனது அமைதி போராட்டத்தை தொடங்கிய பீனிக்ஸ் செட்டில்மெண்டில் செடிகளை நட்டினார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.


    இந்நிலையில், இன்று டர்பன் பகுதியில் உள்ள பாரம்பரிய இடமான பீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் செடிகளை நட்டினார். இந்த பகுதியில் தான் மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தை தொடங்கினார். காந்தியின் நினைவாக அங்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #Johannesburg  #BRICS
    Next Story
    ×