search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JK Rowling"

    • பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சல்மான் ருஷ்டி மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார்

    லண்டன்:

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென எழுந்த மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்று, கத்தியால் அவரது கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஹாரி பாட்டர் கதையை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இவர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன். அவர் நலமுடன் இருக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    ஜே.கே.ரவ்லிங் டுவிட்டர் பதிவிற்கு கீழே கருத்து பதிவிடும் பகுதியில், மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், 'கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான்' என கொலை மிரட்டல் விடுத்து டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×