என் மலர்

  நீங்கள் தேடியது "jewelery looted"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
  • வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

  கோவை,

  கோவை விஷ்வேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் கிருஷ்ணன். ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெற்றோரை பார்ப்பதற்காக செங்கல்பட்டுக்கு சென்றார்.

  அப்போது அரவிந்த் கிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

  பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வைர டாலர், மோதிரம், கம்மல் உள்பட 13½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

  நேற்று வீட்டிற்கு திரும்பி அரவிந்த் கிருஷ்ணன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

  இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

  புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர்.

  இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் வீட்டில் 13½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

  மேலும் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். 

  ×