என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jai Sriram College"

    • 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • 320 மாணவன் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார் வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைத் தலைவர் டி. கே. கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தார். விழாவில் கோவை அக்வா சப்என்ஜினீயரிங் நிறுவனத்தின் நரேந்திரன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.

    விழாவில் 286 இளநிலை பிரிவு மாணவ- மாணவிகளுக்கும், 34 முதுநிலை பிரிவு மற்றும் மேலாண்மை துறை மாணவன் மாணவிகளுக்கும் என மொத்தம் 320 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நாஸ்காம் துணைத் தலைவர் உதயசங்கர் மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்வுத்துறை தலைவர் லட்சுமி பிரியா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் கல்லூரியின் நிர்வாக அதிகாரி அன்பரசு நன்றி கூறினார்.

    ×