search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Iran Ambassador"

  • இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
  • ஐ.நா. பொதுச்சபை தீர்மானத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே ஏற்க மறுத்தது என்றார் இலாஹி

  கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரை இஸ்ரேலிலிருந்து பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்றனர்.

  இந்த தாக்குதலில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது போர் நடத்தி வருகிறது. இப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

  இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

  இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிற்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி (Iraj Elahi) இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

  அவர் இஸ்ரேலை குறித்து தெரிவித்ததாவது:

  இஸ்ரேல் அரசுக்கு பணய கைதிகளின் உயிரை குறித்து சிறிதும் அக்கறை இல்லை. ஹமாஸ் சிறை பிடித்திருக்கும் இஸ்ரேலியர்களை, இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் பாலஸ்தீனர்களுடன் பரிமாற்றம் செய்து கொள்ள ஐ.நா. பொதுச்சபை (UNGA) தீர்மானமாக கொண்டு வந்தும் அதை ஏற்று கொள்ள இஸ்ரேல் மறுத்து விட்டது. அவர்கள் ஹமாஸை அழிக்கவே போர் தொடுத்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை. அவர்களின் நோக்கம், காசாவை ஆக்ரமித்து தங்கள் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தி தங்கள் நாட்டின் குடியமர்வை அங்கு அதிகரிப்பதுதான். இப்போரில் இஸ்ரேல் தோல்வி அடைய போவது உறுதி. ஆனாலும் தோல்வியை ஒத்து கொள்ள மறுத்து ஆபத்தான முயற்சியை தொடர்கின்றனர். பாலஸ்தீனர்களின் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ முடியாத நிலைக்கு பாலஸ்தீனர்களை தள்ளி, அல் அக்ஸா மஸ்ஜித்தையும் இடித்து விட்டனர்.

  இவ்வாறு இலாஹி கூறினார்.

  பெட்ரோல் கொள்முதல் செய்வதை நிறுத்திகொண்டால் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் முன்னுரிமைகளை ஈரான் நிறுத்திவிடும் என்ற தகவலை முன்னாள் இந்திய தூதர் மறுத்துள்ளார்.
  ஐதராபாத்:

  அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும். ஈரானிடம் யாரும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

  இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈரான் நாட்டு துணை தூதர் மசூத் ரிஸ்வானியன் ராஹாகி, ‘ஈரானை ஒதுக்கிவிட்டு சவுதி, ரஷியா, ஈராக் போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்தால், இந்தியாவுக்கு அளித்துவரும் முன்னுரிமையை நிறுத்தி விடுவோம்’ என குறிப்பிட்டிருந்தார்.  அவரது இந்த கருத்து இந்தியாவுக்கு விடப்பட்ட மிரட்டல் போல் அமைந்துள்ளதாக முன்னர் சவுதி அரேபியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இந்திய தூதராக பதவி வகித்த டல்மிஸ் அஹமத் தெரிவித்துள்ளார்.

  ஈரான் நாட்டு துணை தூதர் மசூத் ரிஸ்வானியன் ராஹாகியின் கருத்தை நான் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லை. இதுபோன்ற முடிவை ஒரு தூதர் எடுக்க முடியாது. இதெல்லாம், மிக உயர்மட்டத்தில் உள்ளவர்கள் எடுக்க வேண்டும்.

  நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள் அனைத்துமே இருதரப்பு ஆதாயங்களுக்காகவும், செய்துகொள்ளும் ஒப்பந்தங்களும் பரஸ்பர ஆதாயம் கருதியே செய்யப்படுகின்றன. இந்நிலையில், பொறுப்புள்ள ஒரு நாட்டின் தூதர், பொறுப்பற்ற முறையில் இப்படி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக மூர்க்கத்தனமாக ஈரான் நடந்து கொள்ளாது என ஐதராபாத் நகரில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டல்மிஸ் அஹமத் தெரிவித்துள்ளார். #Iranaggressiveposture #Iranaggressive
  ×