ஹமாஸை ஒழிப்பதாக இஸ்ரேல் கூறுவதன் காரணம் - ஈரான் தூதர்

இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்ஐ.நா. பொதுச்சபை தீர்மானத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே ஏற்க மறுத்தது என்றார் இலாஹி
ஹமாஸை ஒழிப்பதாக இஸ்ரேல் கூறுவதன் காரணம் - ஈரான் தூதர்
Published on

கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரை இஸ்ரேலிலிருந்து பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்றனர்.

இந்த தாக்குதலில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது போர் நடத்தி வருகிறது. இப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிற்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி (Iraj Elahi) இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் இஸ்ரேலை குறித்து தெரிவித்ததாவது:

இஸ்ரேல் அரசுக்கு பணய கைதிகளின் உயிரை குறித்து சிறிதும் அக்கறை இல்லை. ஹமாஸ் சிறை பிடித்திருக்கும் இஸ்ரேலியர்களை, இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் பாலஸ்தீனர்களுடன் பரிமாற்றம் செய்து கொள்ள ஐ.நா. பொதுச்சபை (UNGA) தீர்மானமாக கொண்டு வந்தும் அதை ஏற்று கொள்ள இஸ்ரேல் மறுத்து விட்டது. அவர்கள் ஹமாஸை அழிக்கவே போர் தொடுத்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை. அவர்களின் நோக்கம், காசாவை ஆக்ரமித்து தங்கள் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தி தங்கள் நாட்டின் குடியமர்வை அங்கு அதிகரிப்பதுதான். இப்போரில் இஸ்ரேல் தோல்வி அடைய போவது உறுதி. ஆனாலும் தோல்வியை ஒத்து கொள்ள மறுத்து ஆபத்தான முயற்சியை தொடர்கின்றனர். பாலஸ்தீனர்களின் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ முடியாத நிலைக்கு பாலஸ்தீனர்களை தள்ளி, அல் அக்ஸா மஸ்ஜித்தையும் இடித்து விட்டனர்.

இவ்வாறு இலாஹி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com