search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspector death"

    திருக்கழுக்குன்றம் அருகே லாரி மோதி இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்தவர் துரை (வயது 56). கடந்த 15-ந் தேதி இரவு அவர் பூஞ்சேரியில் ரோந்து பணியை முடித்துவிட்டு மறைமலை நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருக்கழுக்குன்றம் அடுத்த குச்சிச்காடு பகுதியில் வந்த போது, எதிரே வந்த மணல் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இன்ஸ்பெக்டர் துரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது இதயம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், கிட்னி மலர் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தருமபுரி அருகே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
    தருமபுரி

    தருமபுரி அடுத்துள்ள குப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 48). இவர் நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் சப்-டிவிசன் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தென்றல் என்ற மனைவி உள்ளார். இவர் ஒசஅள்ளி புதூரில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தென்றல் வெண்ணாம் பட்டியில் உள்ள ஹவுசிங் போர்ட்டில்  குடியிருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கண்ணையன் 5நாள் விடுமுறையில் சொந்த ஊரான தருமபுரிக்கு வந்தார். நேற்று இரவு ஹவுசிங்போர்ட்டில் உள்ள வீட்டில் அவர் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.  உடனே அவரை உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கண்ணையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான குப்பூருக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்.
    ×