என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indira Gandhi Statue"

    • ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறைனர் அகற்றி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற முடிவு செய்தனர். இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இந்திரா காந்தி சிலையை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

    சிலையின் அடிபாகத்தை இடித்து கொண்டு இருந்தனர். இது குறித்து தகவல் காட்டு தீ போல அந்த பகுதியில் பரவியது.

    தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சியினர் அங்கு குவிந்து சிலையை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். அங்கு பதற்றம் நிலவியது.

    ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

    அதன் பின்னர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குள் ஏன் சிலையின் பீடத்தை உடைத்தீர்கள் என கண்டித்தார். பின்னர் சிலையை அகற்றும் பணியை நிறுத்துமாறு கூறினார்.

    இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிலையை அகற்றும் பணியை நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவியது.

    இந்த இந்திரா காந்தி சிலையை முன்னாள் பிரதமர் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூத்துக்குடியில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை யொட்டி தூத்து க்குடி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், கலை இலக்கியப் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணை தலை வர்கள் விஜயராஜ், பிரபா கரன், மைக்கில் பிரபாகர், அருணாசலம், ரஞ்சிதம் ஜெப ராஜ் ,டேவிட் வசந்த குமார், சின்னகாளை, மாவட்ட பொதுச் செய லாளர் மிக்கேல் பர்னாந்து, மாவட்ட செயலாளர்கள் கோ பால், ஜெயராஜ், நாராயண சாமி, சேவியர் மிஷியர், ஜோ பாய் பச்சேக், அலெக்ஸ், முன்னாள் கவுன்சிலர் வெங்கட் சுப்பிரமணியம், நெப்போலியன், வார்டு தலைவர்கள் தனுஷ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×