search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indigestion in children"

    குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு ஆகும். இயற்கை முறையில் அஜீரண பிரச்சனைக்கு தீர்வு காணும் முறைகளை பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, ஜீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.

    ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.

    மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :

    1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரைமணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.

    2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

    3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

    4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
     
    ×