என் மலர்
நீங்கள் தேடியது "Indian murder"
புதுடெல்லி:
இந்தியாவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ஸ்மிதா சாரூர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஜெர்மனியில் முனீச் நகரம் அருகே தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பிரசாந்தும், அவரது மனைவி ஸ்மிதாவும் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களில் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்மிதா காயத்துடன் உயிர் தப்பினார்.
முனிச் நகரில் குடியேறி இருக்கும் மற்றொரு வெளி நாட்டுக்காரர் இக்கொலையில் ஈடுபட்டார். இந்ததகவலை மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரசாந்த்-ஸ்மிதாவின் 2 குழந்தைகளையும் முனிச் நகரில் உள்ள இந்திய தூதரகம் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மற்ற விரிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
டுவிட்டரில் தன்னை சவ்கிதாரி (காவலாளி) என சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு டுவிட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் விளக்கம் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அவர், “ஏனெனில் நலன் விரும்பிகளுக்கும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் நான் காவலாளியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியை காவலாளியே ஒரு திருடனாக இருக்கிறார் என குற்றம் சாட்டினார். எனவே மோடி தன்னை ஒரு சவ்கிதாரி (காவலாளி) என குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பா.ஜனதா தலைவர்களும் மந்திரிகளும் தங்களது பெயருக்கு முன்னாள் சவ்கிதாரி’ என சேர்த்துக் கொண்டனர். #Indianmurder