என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Election Commission"

    • பீகாரில் தேர்தலுக்கு 4 மாதத்திற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தீவிர சரிபார்ப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • ஜூலை 25ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்திற்குள் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் செய்யப்படும் என்று கடந்த ஜூன் 24-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி தீவிர சிறப்பு திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இதை பணியை செய்வதால் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன. மேலும், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்க குடியுரிமைச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதால், லட்சகணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. மேலும், ஆவணங்களை வருகிற 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் ஆய்வின்படி, சுமார் 12.5 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்திருந்தும், அவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளன. 17.5 லட்சம் வாக்காளர்கள் பீகாரை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டனர். 5.5 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்துள்ளனர். நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளனர்.

    இதனால் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு "பீகாரில் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் தீவிர சரிபார்ப்பின் உண்மையான நோக்கம் என்ன?. எந்த ஒரு தேர்தலுக்கு முன்பும் போதிய அவகாசம் அளித்தே இதுபோன்ற சரிபார்ப்பை நடத்த வேண்டும்" என தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    • மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் பிரபுவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
    • தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    சென்னை :

    பாராளுமன்றம், சட்டசபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    அதை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

    அந்த வகையில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்கை காட்டாத சில வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சட்டசபை தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் பிரபுவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    மேலும், சங்கரன்கோவில் தொகுதி சுயேச்சை வேட்பாளர் பாலமுருகேசன், அவிநாசி தொகுதி சுயேச்சை வேட்பாளர் சகுந்தலா, சைதாப்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் இளங்கோ, வெங்கடேஷ், விருகம்பாக்கம் தொகுதி அண்ணா திராவிட மக்கள் கழக வேட்பாளர் தினேஷ்குமார் ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    ×