search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in a pond"

    • ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது.
    • புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாளாவடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக இந்த வனச்சரகத்தில் மான், யானை, புலி, காட்டெருமை, செந்நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    இந்த மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் நடமாடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது. இதை குளத்தின் மறுபக்கம் இருந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இந்நிலையில் புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×