search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal liquor"

    • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பாரில் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி, இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கலப்பட மது விற்பனை நடைபெறுவதாகவும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்தை போல சின்னியகவுண்டம்பாளையத்திலும் நடைபெறாமல் இருக்க, சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை காவல்துறையினர் முழுமையாக தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாராபுரம் :

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக டிஜிபி. சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள்,மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தாராபுரம் டிஎஸ்பி. தன்ராசு உத்தரவின் பேரில் அலங்கியம் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் அலங்கியம், கொங்கு, மனக்கடவு, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தாராபுரம் அருகே அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அலங்கியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் அலங்கியம் போலீசார் காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (42) என்பவரது வீட்டினை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதைத்து வைக்கப்பட்டிருந்தஊறல் கைப்பற்றப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது .

    அதன் பிறகு அவரிடம் வேறு ஏதாவது இடத்தில் ஊறல் பதுக்கி வைத்துள்ளாரா என்று விசாரணை நடத்தப்பட்டதில் அவரது வீட்டில் இரண்டு லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். பிறகு 2 லிட்டர் சாராயத்துடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் . அதன் பிறகு மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட அலங்கியம் காவலர்களை தாராபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.

    • கண்டிக்காட்டு வலசு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியில் உள்ள முள்காடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக அறச்சலூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (72) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரத்து 210 மதிப்பிலான 17 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • இந்த விவகாரம் தொடர்பாக பொடாட் மற்றும் அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்.
    • இரண்டு துணை எஸ்பிகள் உள்பட ஆறு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது. மேலும், சுமார் 50 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொடாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு-குறு வணிகர்கள் சிலர் சட்டவிரோதமான மதுபானத்தை மெத்தைல் ஆல்கஹால் அல்லது மெத்தனால் என்ற அதிக நச்சுத் தொழிற்சாலை கரைப்பான்களுடன் கலந்து கிராம மக்களுக்கு ஒரு பைக்கு ₹ 20க்கு விற்றதாக தெரியவந்துள்ளது.

    அதன்படி, தடயவியல் பகுப்பாய்வு பாதிக்கப்பட்டவர்கள் மித்தல் ஆல்கஹால் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க இந்திய காவல்துறை மூத்த அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை குஜராத் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

    ஜெயேஷ் என்ற ராஜூ என்பவர் தான் மேலாளராக பணிபுரிந்த அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மித்தல் ஆல்கஹாலை திருடி, அதை தனது பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25ம் தேதி ₹40,000க்கு விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது ஒரு தொழில்துறை கரைப்பான் என்பதை அறிந்திருந்தும், சஞ்சய் இந்த ரசாயனத்தை போடாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்ளையர்களுக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையர்கள் ரசாயனத்தில் தண்ணீரை கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொடாட் மற்றும் அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் மற்றும் காவலர்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:-

    போடாட் எஸ்பி கரன்ராஜ் வகேலா மற்றும் அகமதாபாத் ஸ்பி வீரேந்திரசிங் யாதவ் ஆகியோரை இடமாற்றம் செய்துள்ளோம். இரண்டு துணை எஸ்பிகள் உள்பட ஆறு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது. மேலும், சுமார் 50 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொடாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு-குறு வணிகர்கள் சிலர் சட்டவிரோதமான மதுபானத்தை மெத்தைல் ஆல்கஹால் அல்லது மெத்தனால் என்ற அதிக நச்சுத் தொழிற்சாலை கரைப்பான்களுடன் கலந்து கிராம மக்களுக்கு ஒரு பைக்கு ₹ 20க்கு விற்றதாக தெரியவந்துள்ளது.

    அதன்படி, தடயவியல் பகுப்பாய்வு பாதிக்கப்பட்டவர்கள் மித்தல் ஆல்கஹால் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க இந்திய காவல்துறை மூத்த அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை குஜராத் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

    ஜெயேஷ் என்ற ராஜூ என்பவர் தான் மேலாளராக பணிபுரிந்த அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மித்தல் ஆல்கஹாலை திருடி, அதை தனது பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25ம் தேதி ₹40,000க்கு விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது ஒரு தொழில்துறை கரைப்பான் என்பதை அறிந்திருந்தும், சஞ்சய் இந்த ரசாயனத்தை போடாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்ளையர்களுக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இந்த கொள்ளையர்கள் ரசாயனத்தில் தண்ணீரை கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • மதுரை அருகே விதி மீறும் மதுபானம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
    • குறைந்த விலைக்கு மதுபானங்களை கொள்முதல் செய்து, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட் வக்கீல்கள் முத்துக்குமார், அர்ச்சனாதேவி, காயத்திரி , சமூக ஆர்வலர்கள் அருண், வினோதா, ஷாலினி ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அனீஷ் சேகரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எல்லீஸ் நகர் பிரதான சாலையில் செயல்படும் மதுபான கூடம், விதிமுறைகளை மீறி செயல்படுகிறது. இங்கு எம்.ஆர்.பி.யை விட 4 சதவீதம் குறைந்த விலைக்கு மதுபானங்களை கொள்முதல் செய்து, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

    வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. கிளப் செயல்படும் கட்டிடத்துக்கு அருகில் பள்ளிகூடம், கோவில்கள் உள்ளன. பார்க்கிங் இடத்தில் டேபிள்களை போட்டு மதுபானம் அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து நடக்கிறது. பார் ஊழியர்களுக்கு முறையான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. வழங்கப்படவில்லை. எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கலெக்டர், இதுகுறித்து மத்திய கலால் வரி துறை உதவி ஆணையருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ×