விதி மீறும் மதுபானம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார்

மதுரை அருகே விதி மீறும் மதுபானம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. குறைந்த விலைக்கு மதுபானங்களை கொள்முதல் செய்து, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
விதி மீறும் மதுபானம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார்
Published on

மதுரை

மதுரை ஐகோர்ட் வக்கீல்கள் முத்துக்குமார், அர்ச்சனாதேவி, காயத்திரி , சமூக ஆர்வலர்கள் அருண், வினோதா, ஷாலினி ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அனீஷ் சேகரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எல்லீஸ் நகர் பிரதான சாலையில் செயல்படும் மதுபான கூடம், விதிமுறைகளை மீறி செயல்படுகிறது. இங்கு எம்.ஆர்.பி.யை விட 4 சதவீதம் குறைந்த விலைக்கு மதுபானங்களை கொள்முதல் செய்து, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. கிளப் செயல்படும் கட்டிடத்துக்கு அருகில் பள்ளிகூடம், கோவில்கள் உள்ளன. பார்க்கிங் இடத்தில் டேபிள்களை போட்டு மதுபானம் அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து நடக்கிறது. பார் ஊழியர்களுக்கு முறையான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. வழங்கப்படவில்லை. எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்று கொண்ட கலெக்டர், இதுகுறித்து மத்திய கலால் வரி துறை உதவி ஆணையருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com