search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "housing scheme"

    • மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 வீடுகளுக்கு தலா ஒரு வீட்டிற்கு ரூ.2.40 லட்சம் மானியமாக வழங்கப்படு கிறது.
    • வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 2016-17-ம் ஆண்டு மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 வீடுகளுக்கு தலா ஒரு வீட்டிற்கு ரூ.2.40 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்திற்குரிய தகுதியான மீனவ பயனாளி களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மேலும் இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விண்ணப்பம் பெற, "பி4/63 நேருஜி நகர், 80 அடி ரோடு, திண்டுக்கல்-624 001" என்ற முகவரியில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள லாம் என மாவட்ட கலெ க்டர் பூங்கொடி தெரி வித்துள்ளார்.

    பிரதமர் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. #PMModi #HousingScheme
    புதுடெல்லி:

    பிரதமர் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடனுடன் இணைந்த மானிய திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்கள், நடுத்தர வருவாய் பிரிவினர் என 3 பிரிவுகளாக வீடுகள் கட்ட உதவி அளிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா கூறுகையில், ‘பிரதம மந்திரியின் திட்டத்தின்கீழ் நகர்ப்புறத்தில் அதிக அளவு பயனாளிகள் பயன் பெற்றது குஜராத் மாநிலம் ஆகும். அங்கு 88 ஆயிரம் பேர் மானியம் பெற்று உள்ளனர். தமிழகத்தில் 12 ஆயிரம் பேரும் மானியம் பெற்று இருக்கிறார்கள். நாடு முழுவதும் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மானியம் பெற்று உள்ளனர்.

    இந்த திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டு இதுவரை 12 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 25 லட்சம் வீடுகள் முடியும் தருவாயில் உள்ளன’ என்றார்.
    ×