

திண்டுக்கல்:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 2016-17-ம் ஆண்டு மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 வீடுகளுக்கு தலா ஒரு வீட்டிற்கு ரூ.2.40 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்குரிய தகுதியான மீனவ பயனாளி களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விண்ணப்பம் பெற, "பி4/63 நேருஜி நகர், 80 அடி ரோடு, திண்டுக்கல்-624 001" என்ற முகவரியில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள லாம் என மாவட்ட கலெ க்டர் பூங்கொடி தெரி வித்துள்ளார்.