search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holiday day"

    • முதல் நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • முதல் 3 நாட்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான 22 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பெருநை நெல்லை 6-வது புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாணவ- மாணவிகள்

    முதல் நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பரத நாட்டி யம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுமார் பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை யானது.

    இதனை ஏராளமான வர்கள் பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை தினமான இன்று ஏராள மான பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் புத்தக திருவிழாவிற்கு வந்தனர்.

    விளையாட்டு போட்டிகள்

    புத்தக திருவிழாவை யொட்டி தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாணவ- மாணவிகளுக்கு மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகளான கோலிக்காய், பம்பரம், வட்டு உருட்டுதல், பச்சை குதிரை, கயிறு இழுத்தல், கயிறு தாண்டுதல், பல்லாங்குழி, தாயம் கட்டம், பாம்பு கட்டம், சிறுமிகளுக்கு பாண்டி, கொலை கொலையா முந்திரிக்காய் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டுகள் நடத்தப்படுகிறது.

    மேலும் பார்வை திறன் அற்ற மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு பயிற்சி வகுப்பு மற்றும் போட்டிகள் நடத்தப்படு கிறது.

    சிறப்பு அரங்குகள்

    இந்த ஆண்டு 6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா மாற்றுத்திறனாளி உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கியது என்பதை வலியுறுத்தி 'அனைவருக்கு மான பன்முக தன்மை' என்ற தலைப்பில் அமைக்கப் பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் 3 நாட்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான 22 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கான பொழுதுபோக்கு, விளையாட்டு பொருட்கள் இடம் பெற்றுள்ளது.

    இவர்கள் இடம் பெறும் வகையில் வீல்சேர் கால்பந்து, தொடு முறையில் வண்ணம் தீட்டுதல், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி நடைமுறைகள், ஸ்மார்ட் வகுப்பறை, பார்வையற்றோருக்கு ஏற்ற வகையில் சாதாரண புத்தகங்களை 'இ' புத்தகங்களாக மாற்றும் வகையில் முறைகள் ஆகியவை அடங்கி உள்ளது.

    மேலும் தொடர் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.

    புத்தக திருவிழாவை யொட்டி மாணவ- மாணவி களுக்காக ஏற்கனவே போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் சேரன் மகாதேவி கல்வி மாவட்டம், வள்ளியூர் கல்வி மாவட் டத்தில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் இன்று நடைபெற்ற போட்டி யில் கலந்து கொண்டனர்.

    ×